அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “திண்டுக்கல் சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகம் நிலவுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.