தெற்கு ஜப்பானை ஒட்டி 12க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை 'பூனை தீவுகள்' என அழைக்கப்படுகின்றன. இங்கு இருக்கும் ஓஷிமா மற்றும் டாஸிரொஜிமா என்ற 2 தீவுகளில் பூனைகள் அதிகம் வசிக்கின்றன. இந்த தீவுகளில் நடைபெற்ற பட்டு உற்பத்தியை எலிகள் சேதப்படுத்தி வந்ததால், அதை அழிப்பதற்காக பூனைகளை அதிகம் வளர்த்தனர். ஆனால் பட்டுத்தொழில் நின்று போனதால் நகரங்களுக்கு மக்கள் சென்றுவிட்டனர். இருப்பினும் ஒரு நபருக்கு ஆறு என்ற விகிதத்தில் பூனைகள் காணப்படுகின்றன.