யானையின் தும்பிக்கையானது 1.5 லட்சம் தனித்தனி தசை நார்கள் மற்றும் நரம்புகளால் ஆனது. இதன் துணை கொண்டு தரையில் கிடக்கும் சிறிய நாணயத்தையும் எடுக்க முடியும், பெரிய மரத்தையும் முறிக்க முடியும். சுவாசிப்பதில் துவங்கி, கொய்தல், நீராடுதல், மோப்பம் பிடித்தல், உண்ணுதல் என பல பணிகளை செய்கிறது. இது ஒரு ஊது கொம்பு போல செயல்பட்டு ஒலி எழுப்பவும் உதவுகிறது. ஒரே மூச்சில் 75 லிட்டர் தண்ணீரை தும்பிக்கை உதவியால் குடிக்கும்.