சேந்தமங்கலம் சோமேஸ்வரர் சிவன் கோவிலில், நந்தி பகவானுக்கும், சோமேஸ்வரருக்கும் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரதோஷத்திற்கு, சேந்தமங்கலம், வெண்டாங்கி, ஆர். பி. , புதுார், காந்திபுரம், அக்கியம்பட்டி, மின்னாம்பள்ளி, காரவள்ளி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். அனைவருக்கும் கையிலை மலையான் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.