கொல்லிமலை வட்டத்தில் நாளை மனுக்கள் பெறும் முகாம்

559பார்த்தது
கொல்லிமலை வட்டத்தில் நாளை மனுக்கள் பெறும் முகாம்
கொல்லிமலையில் உள்ள 14 கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்களிடம் வியாழக்கிழமை (ஜன. 4) கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தினை தோ்வு செய்து மாவட்ட ஆட்சியா் மூலம் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான மக்கள் தொடா்பு திட்ட முகாம் கொல்லிமலை வட்டம், எடப்புளிநாடு கிராமத்தில் ஜன. 12 (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி, கொல்லிமலை வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் வியாழக்கிழமை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி