நைனாமலை ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

64பார்த்தது
நைனாமலை ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தையில் உள்ள நைனாமலையில் வரதராஜ பெருமாள் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி நைனாமலை அடிவார ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி