ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

56பார்த்தது
ஆடிக் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், கூலிப்பட்டி கந்தகிரி முருகன் கோயில், கருமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் முருகன் கோயில்களில் பக்தா்கள் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடைய செய்தி