மங்களபுரத்தில் திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு

66பார்த்தது
மங்களபுரத்தில் திமுக சார்பாக வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை ஒன்றியம், மங்களபுரம், ஒரம்பு மற்றும் சிங்கிலியம்கோம்பை பகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து எம்பி ராஜேஷ்குமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு. பிரபு அவர்களும் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

பிரச்சாரத்தில் மூன்றாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்கள்.

நிகழ்வின்போது நாமகிரிபேட்டை ஒன்றிய கழக செயலாளர் திரு. கேபி. இராமசுவாமி, Ex. MLA. , அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு. ஏகே. பாலசந்தர் அவர்கள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி