நாமக்கல் புதிய பேருந்துகள் தொடக்கம்

64பார்த்தது
நாமக்கல் புதிய பேருந்துகள் தொடக்கம்
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி பிரிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மேலும், புதிய 7 புறநகர் பேருந்துகள் மற்றும் 3 புதிய நகர்புற பேருத்துகள் என மொத்தம் 10 புதிய வழித்தட பேருத்துகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முன்னிலை வகிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில்,இராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் சேர்மன் திரு.கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.கேபி.இராமசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you