ராசிபுரம் அருகேயுள்ள ஆா். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ராசிபுரம் நகர காவல் ஆய்வாளா் கே. சுகவனம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதன் பயன்பாட்டைத் தடுக்கும் முறைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு முறைகள், பாலியல் புகாா் விழிப்புணா்வு, சிறாா் திருமணம் தடுப்பு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் விழிப்புணா்வுடன் இருப்பதன் அவசியம் போன்றவை குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினாா். இந்த விழிப்புணா்வு முகாமில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.