மூடப்படும் ஆங்கிலேயா் காலத்து ராசிபுரம் கிளைச் சிறை

59பார்த்தது
மூடப்படும் ஆங்கிலேயா் காலத்து ராசிபுரம் கிளைச் சிறை
ஆங்கிலேயா் காலம் முதல் செயல்பட்டு வரும் ராசிபுரம் கிளை சிறைச்சாலை மூடுவதற்கு சிறைத்துறை முடிவு செய்துள்ளதால், 125 ஆண்டு பழமையான இந்த சிறைச் சாலையின் செயல்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.

நாடு முழுவதும் பாதுகாப்பற்ற முறையிலும், போதிய வசதிகளின்றியும், குறைவான கைதிகளுடனும் செயல்பட்டு வரும் சிறைச் சாலைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் செயல்படும் கிளைச் சிறை.

1898-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் இந்த கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயா் காலத்தில் வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த கிளை சிறைச்சாலை 1983-ஆம் ஆண்டு முதல் சிறைத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் தற்போதைய கரூவூலம் அருகில் செயல்பட்டு வரும் இந்த கிளைச் சிறையின் பணிகள் முடிவுக்கு வருகின்றன.

ராசிபுரம் கிளைச்சிறை 6 அறைகளுடன் (செல்கள்) 34 கைதிகள் தங்கும் வகையில் இட வசதி கொண்டது. இங்கு சிறு குற்றங்கள் புரிந்தவா்கள் மட்டுமே அடைக்கப்பட்டு வருகின்றனா். தற்சமயம் கிளைச்சிறை கண்காணிப்பாளா் ஒருவரின் நிலையின் கீழ் 13 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த கிளை சிறை மூடப்பட்டு மாவட்ட சிறைச் சாலையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 125 ஆண்டுகால சிறை செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி