தமிழ்நாட்டில் இன்று (டிச.1) காலை 10 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.