பரமத்திவேலூர் பகுதிகளில் தர்பூசணி விற்பனை படுஜோர்

1050பார்த்தது
பரமத்திவேலூர் பகுதிகளில் தர்பூசணி விற்பனை படுஜோர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில்நிலவும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூசணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பரமத்தி வேலூர், பரமத்தி பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமோகமாக விற்பனை நடைபெறுகிறது. தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி