உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: வேட்பாளர் தமிழ்மணி

2974பார்த்தது
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணி தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தார். இதற்கு இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம். எல். ஏ சேகர் ஆகியோர் அவருக்கு வாக்கு சேகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர் தமிழ்மணி பேசியதாவது;

எனது உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள், தற்போது நான் நல்ல நிலையில் உள்ளேன். மக்கள் பணி செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். கடும் வெயிலின் தாக்கத்திலும் ஓய்வில்லாமல் வாக்கு சேகரித்ததின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நான் மீண்டும் வந்து விட்டேன். உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன். ஒவ்வொரு ஒன்றியத்திலும் எனது சொந்த செலவில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 3 போர்வெல் போட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி