கபிலர்மலை பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

59பார்த்தது
கபிலர்மலை பகுதியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் V. S. மாதேஸ்வரனை ஆதரித்து கபிலர்மலை ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி ஊராட்சிகளில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய திமுக செயலாளர் K. K. சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் K. S. மூர்த்தி Ex. MLA, தொகுதி பார்வையாளர் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கொமதேக தொகுதி பொறுப்பாளர் நடராஜ், ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகர், மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், திமுக உறுப்பினர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி