கடல் மட்டம் 120மீ கீழே சென்றால் உலக நிலப்பரப்பில் பல மாற்றங்கள் நிகழும். வட மற்றும் தென் அமெரிக்காவை சுற்றி இருக்கும் சில நூறு கீ.மீ நிலப்பரப்பு வெளியில் தெரியும். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நிலப்பரப்பு உருவாகி இலங்கை இந்தியாவுடன் இணையும். ஐரோப்பா கண்டத்தில் உள்ள கடல்கள் மறைந்து அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற தீவுகள் ஐரோப்பாவுடன் இணையும். இந்தோனேஷியாவின் தல தீவுகள் ஒன்றாக இணைந்து ஆசிய கண்டத்தின் நிலப்பரப்பில் இணையும்.