டி. எஸ். பி. ஆலோசனை கூட்டம்

79பார்த்தது
வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன் டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன்  டி. எஸ். பி. ஆலோசனை கூட்டம்

 



குமாரபாளையத்தில் வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடன் டாஸ்மாக் கண்காணிப்பளர்களுடன்  டி. எஸ். பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் டி. எஸ். பி. இமயவரம்பன் பேசியதாவது:

லோக்சபா தேர்தலையொட்டி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் போலீசார் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவார்கள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டவிரோதமான செயல்களில்  ஈடுபட வாய்ப்பு உள்ளது.  இதனால் டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் இரவு நேரத்தில் கூட டாஸ்மாக் கடைகள் உள்ள வளாகத்தில் தங்கிக்கொள்ள வேண்டும். வங்கிகள், ஏ. டி. எம். மையங்களை வங்கி நிர்வாகத்தினர் இரவு பகலாக தங்கள் பொறுப்பில் ஆட்களை வைத்து கண்காணிக்க வேண்டும். நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் கடையில் உள்ள  தங்கம் மற்றும் வெள்ளி  பொருட்களை தங்கள் பாதுகாப்பில் பத்திரமாக பாதுகாப்பாக வைத்து, போலீசாருக்கு உதவிட வேண்டும். போலீசார் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உடன் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற அனைவரும் டி. எஸ். பி. வழிகாட்டுதல்படி செய்கிறோம் என உறுதி கூறினர்.

தொடர்புடைய செய்தி