மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆலோசனை கூட்டம்

84பார்த்தது
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட  ஆலோசனை கூட்டம் நடந்தது.

 குமாரபாளையம் பகுதியில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்ற நபர் ஒருவர்,  மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது போல் இனி நடக்க கூடாது எனும் வகையில்,  அவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி போலீஸ் ஸ்டேஷனில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான  இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தொடர்புடைய செய்தி