சென்னை: 234 தொகுதிகளில் வெற்றி - பிரேமலதா விஜயகாந்த்
அ. தி. மு. க. , வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்' என தே. மு. தி. க. , பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று (நவம்பர் 10) முதல் பணிகளை துவங்கி இருக்கிறோம். அ. தி. மு. க. , வுடன் நட்புறவுடன் நாங்கள் தொடர்கிறோம். அ. தி. மு. க. , வுடன் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய ஒற்றுமை, நட்புணர்வுடன் சிறப்பாக உள்ளது. தி. மு. க. , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பல்வேறு துறை அரசு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விஜயபிரபாகரன் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்குவது குறித்து அறிவிக்க உள்ளோம். ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. அனைத்து மாவட்டங்களின் சாலைகளும் எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என்றார்.