இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உணவை விழுங்கும் வேளையில் மூளைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடப்பதை கண்டறிந்துள்ளனர். நல்ல சத்துள்ள உணவு கிடைத்ததும் மூளையில் செரடோனின் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். சத்தான உணவை உட்கொள்ளும் பொழுது மூளை செரடோனினை உற்பத்தி செய்வதை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.