ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

கோயம்பேடு: நடைபாதை கடைகளுக்கு ரூ. 84 ஆயிரம் அபராதம்

கோயம்பேடு: நடைபாதை கடைகளுக்கு ரூ. 84 ஆயிரம் அபராதம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளுக்கு ரூ. 84, 700 அபராதம் விதித்து அங்காடி நிர்வாக முதன்மை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மார்க்கெட் வளாகத்திற்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அத்துடன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்த கடைகளுக்கு ரூ. 84, 700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தெரியவந்ததால் கடும் நடவடிக்கை எடுப்படும் என்று அங்காடி நிர்வாகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வீடியோஸ்


சென்னை
Nov 12, 2024, 13:11 IST/அண்ணா நகர்
அண்ணா நகர்

நவ. 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Nov 12, 2024, 13:11 IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவ. 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 2. 30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று காலை 8. 30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக,  நாளை (நவ. 13) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நன்றி ஏஎன்ஐ