நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு கூட்டம் அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், போரூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.