பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

68பார்த்தது
அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உம்பளச்சேரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், பணியாளர்கள், வகுப்பறை கட்டிடம், ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உம்பளச்சேரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தின் போது பேசிய ஊர் பிரமுகர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக அரசு செய்து தர வேண்டுமென வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தர உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி