நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்மிகு ஸ்ரீ வேதநாயகி அம்மன் ஊடாகிய வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கும் வேதாரண்யேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.