தைல மரங்கள் தீயில் எரிந்து நாசம்

78பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே ஆதனூர் ஊராட்சி அண்டர் காடு திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள லாரி எடை போடும் நிலையம் எதிரில் இன்று மதியம் மின்மாற்றில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள தைல மரங்கள் எரிந்து நாசம் ஆகின. உடனடியாக வேதாரணியம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி