நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் தியாகராஜர் சுவாமி கோவிலில் அஷ்டபைரவர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று இரவு ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.