மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைய வீர தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் இணைந்து இரண்டு மணி நேர உலக சாதனைகளை சங்கம் திருவிழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சிகள் கோயம்புத்தூர், சேலம், சென்னை பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பரதம், யோகா, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன.