மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

66பார்த்தது
மயிலாடுதுறை எஸ். பி. அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மனு விசாரணை நாளில் 10 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 3 புகாா் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு அறிவுறுத்தினாா்.

போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட 7 மனுக்கள் மீது உடனடித் தீா்வு காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி