மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் சபாநாயகர் முதலியார் எந்த மேல்நிலைப் பள்ளியில் நூறாவது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளியின் செயலர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் ஜெயபிரகாஷ் நாராயணன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.