இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் உயிர்நீத்த போலீசருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை ஆயுதப்படை போலீசார் செய்தனர்.