மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யுஜிசி விதிகளில் திருத்தம் செய்த ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசையும், இட ஒதுக்கீடு உரிமையை பறிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.