சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் ஏற காத்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இந்நிலையில், சுமார் 20 நிமிடம் கழித்து சுயநினைவுக்கு வந்த அவர், தான் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். மரண வாயிலை தொட்டுவிட்டு வந்த அவர் மருத்துவமனைக்கு போகாமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்றது இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் வீட்டுக்கடன் உள்ளிட்ட சுமைகளால் இதுபோல் நடந்துகொள்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.