மழை நீரை அகற்ற கோரிக்கை

54பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாடாளன் சன்னதி அருகில் உள்ள வீதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனை வெளியேற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி