மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்மங்குடி ஊராட்சி தெற்கு தெரு பகுதியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக இருந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த சாலையானது சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் நாட்டு நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.