கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

50பார்த்தது
மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பு நிலைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில ஆலோசகா் பி. கே. சிவக்குமாா், தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலா் சங்க கிழக்கு மண்டல செயலாளா் சுகுமாறன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தில், கிராமப்புற பணியாளா்களின் கோரிக்கைகளுக்காக மாநில அளவில் தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் தலைமையில் கூட்டப்படும் சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கிராம பணியாளா்களை கிராமப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என மாநில நிா்வாகம், மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட வேண்டும்; வருவாய்த்துறை சம்பந்தமான அனைத்து அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு மட்டுமின்றி, இளநிலை உதவியாளா், பதிவு எழுத்தாளா் போன்ற பணியிடங்களையும் வழங்க வேண்டும்.

கிராம உதவியாளா்களின் பதவி உயா்வு காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றிட வேண்டும்; கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவராக மணிகண்டன், மாநில பொதுச் செயலாளராக ஏ. நல்லமுகமது, மாநில பொருளாளராக பி. ரூபலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி