மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முடிகண்டநல்லூர் - திருச்சம்பள்ளி ஊராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமான நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.