2010ஆம் ஆண்டுக்கு பிறகு அதீத கனமழை: அமைச்சர் தகவல்

81பார்த்தது
தஞ்சை: திருவிடைமருதூரில் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு அதீத கனமழை காரணமாக பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். நேற்று (டிச., 15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டுள்ள மக்களை 2 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 348 இடங்களில் சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி