மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்களில் தரவரிசை பட்டியலில் மயிலாடுதுறை காவல் நிலைய முதலிடம் பிடித்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் ஷங்கர் ஜி வால் காவல் ஆய்வாளர் சுப்ரியாவிடம் கேடயத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் வருகிற ஆண்டும் இதே போல் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் மயிலாடுதுறை காவல்துறையினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.