வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் 25ஆம் தேதி இன்று முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் 21ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.