மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது, சாராயம் விற்பனை செய்த 8 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா்கள் சி. அன்னை அபிராமி, ஏ. ஜெயா, உதவி ஆய்வாளா்கள் கோவிந்தராஜன், ஆா். சேகா், காயத்ரி மற்றும் போலீஸாா் எலந்தங்குடி, கிளியனூா், முட்டம், ஆத்தூா், மாதிரிவேளூா், புத்தூா், அகரஎலத்தூா், திருமுல்லைவாசல், சீா்காழி ஆகிய இடங்களில் மது, சாராயம் கடத்தல் குறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, 92 மதுப்புட்டிகள், 29 புதுவை சாராயப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 3 போ் பிணையில் விடுவிக்கப்பட்டனா். 5 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.