விஏஓ மீது கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார்.

1080பார்த்தது
விஏஓ மீது கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார்.
.
நாகப்பட்டினம் சிபிசிஎல் நிலஎடுப்பு பனங்குடி கிராம குத்தகைதாரர்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நேற்று ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆர்டிஓவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் அருகே பனங்குடி சிபிசிஎல் நிலஎடுப்பால் பாதிக்கப்பட்ட குத்தகைதார்கள், சாகுபடிதாரர்கள், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுத தொகை வழங்குவது சம்பந்தமாக விபரங்கள் சேகரிக்கப்படுவதை தெரிந்து, கிராமத்தில் உள்ள நாங்கள் விஏஓவை அணுகினோம். எங்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றனர். பொதுமக்களிடம் விவசாய கூலி வேலையும், பார்த்துக்கொண்டு, வேறு இடத்தில் கட்டட கூலி வேலைகளுக்கும் செல்கீறீர்கள். உங்களுகுக்கு என்ன இழப்பீடு வேண்டி உள்ளது. வயதானவர்களுக்கு என்ன இழப்பீடு வேண்டி உள்ளது என்று கேட்கின்றனர். எங்களை ஒரு பிச்சைக்காரர்களுக்கு சமமாக நடத்துகிறார். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் முடிவு என்கிறார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி