வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் வட்டவர்த்தி பகுதியில் பழவாற்றின் கிளை மைக்காலான வேலன் வாய்க்கால் மூலம் பட்டவர்த்தி, தலைஞாயிறு, மன்னிப்பள்ளம் ஆகிய கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை சார்பில் இதன் கரைகளை பலப்படுத்தி பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆனது தற்பொழுது மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.