

மயிலாடுதுறை: ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம் ஊராட்சி வடமட்டம் பேருந்து நிலையத்தில் முஷ்டகுடி கிளை அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு அதிமுக சார்பாக பாபா பழனி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.