தமிழ்நாடு தங்கும் விடுதியை இழுத்து பூட்டி போராட்டம்

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் தரங்கம்பாடி சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த தங்கும் விடுதியில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு தங்கும் விடுதி வாயில் கதவை இழுத்து மூடி நேற்று(செப்.1) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய உறுப்பினர் பரமசிவம் தலைமை தாங்கினார், போராட்டத்தின் போது எந்தவித காரணமும் இன்றி பணியாளர்களை பணி நிறுத்தம் மற்றும் திடீர் திடீரென பணியிடை மாற்றம் செய்தது, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குளறுபடி, பணி சுமையை ஏற்படுத்தி பணியாளர்களை மன அழுத்தத்திற்குட்படுத்தியது உள்ளிட்ட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனை அறிந்த பொறையாறு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி