திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை தாம்பரம் வரை விடுமுறை தின சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளில் இந்த ரயிலானது திருச்சியில் இருந்து காலை 05.30 மணிக்கு புறப்பட்டு 07.28 மணிக்கு மயிலாடுதுறையில் வந்தடைகிறது. பின்பு 07:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 03:45 மணிக்கு புறப்பட்டு இரவு 11:40 திருச்சி வந்தடைகிறது.