மயிலாடுதுறையில் பழங்குடியினர் மக்களுக்காக தனி குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என நரிக்குறவர் சமுதாய மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகாபாரதியிடம் நரிக்குறவர் சமுதாய பிரதிநிதிகளான எஸ் டி ஒருங்கிணைப்பு குழு மாநில அமைப்பாளர் ஜெய்ஷங்கர் தலைமையில் மனுவாக வழங்கினர். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவிட்டார்.