மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் நாளாக தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதன் காரணமாக மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.