மயிலாடுதுறை அருகே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று(ஆக.30) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், முருகன் முத்தமிழ் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார். மேலும் உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு நடைபெற்ற இருப்பதாகவும், இவ்வளவு பெரிய வரவேற்பை கண்டு எதிர்க்கட்சிகள் எப்படி பாராட்டுவார்கள் எனவும் அதைப்பற்றி வசை பாடத்தான் செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.