. விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

51பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம்நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவன சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் தொடங்கி கைய படுத்திய நிலங்களில் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து  கையகப்படுத்தப்பட்டுள்ளது.   கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைதி பேச்சு வார்த்தையில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் R&R இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என கொடுத்த உத்தரவாதின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் கொடுத்த உறுதியின்
நிறைவேற்றப்படாததால் சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து சிபிசிஎல் நுழைவாயில் முன்பு நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம்
3 கிராம் விவசாயிகள் மற்றும் விவசாய குழு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி