காது கேளாதோர் சைகை மொழி போராட்டம்.

76பார்த்தது
காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்; 7, அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் காது கேளாதோர் சைகை மொழி போராட்டம்.


காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட 7, அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகையில் மாற்றுத் திறனாளிகள் சைகை மொழி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், காது கேளாதோர் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் காது கேளாதோர் வாய் பேசாதோருக்கு 1% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் செய்கை மொழி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த மாற்று திறனாளிகள், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, யிடம் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி